உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குட்டியுடன் சாலையில் உலா வரும் காட்டு யானை; கூடுதல் கண்காணிப்பு அவசியம்

குட்டியுடன் சாலையில் உலா வரும் காட்டு யானை; கூடுதல் கண்காணிப்பு அவசியம்

கூடலுார்,; கூடலுார் கோழிக்கோடு சாலை குடோன் அருகே, அடிக்கடி குட்டியுடன் சாலையை கடந்து செல்லும் காட்டு யானையை கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வலியுறுத்துள்ளனர்.கூடலுார் குடோன் நாடுகாணி இடையே கோழிக்கோடு சாலை ஒட்டி, ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையமும், மறுபுறம் சிறு வனப்பகுதியும் அதனை ஒட்டி பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டமும் அமைந்துள்ளன.இப்பகுதியில் முகாமிடும் காட்டு யானைகள், தடுப்பணை அருகே, சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக அப்பகுதியில், குட்டியுடன் முகமிட்டுள்ள காட்டு யானை அடிக்கடி சாலையை கடந்து சென்று வருகிறது. 'இவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாகனங்கள் இயக்க வேண்டும்,' என, வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'கோழிக்கோடு சாலை குடோன் நாடுகாணி இடைப்பட்ட பசுமையான வனப்பகுதி, ஆண்டுதோறும் யானைகளுக்கு வன விலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் தடை இன்றி கிடைத்து வருகிறது. ஜீன்பூல் தாவர மையத்தை ஒட்டி அகழி அமைத்துள்ளதால், இப்பகுதியில் முகாமிடும் காட்டு யானைகள் தடுப்பணை அருகே மட்டுமே, சாலையை கடந்து செல்கின்றன. எனவே, அதிக வாகன போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில், யானைகள் இடையூறின்றி சாலையை கடந்து செல்லும் வகையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !