உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அகழியை கடந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்

அகழியை கடந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்

கூடலுார்; கூடலுார் தொரப்பள்ளி பகுதியில் காட்டு யானைகள் அகழியை கடந்த விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.கூடலுார் தொரப்பள்ளி பகுதிக்குள் காட்டு யானைகளை நுழைவதை தடுக்க, முதுமலை வன எல்லையில் அகழி அமைக்கப்பட்டுள்ளது. சில யானைகள் அகழியை சேதப்படுத்தி, தொரப்பள்ளிக்குள் நுழைவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.இவ்வாறு நுழைந்த மூன்று ஆண் காட்டு யானைகள் பகலில், குடியிருப்பில் ஒட்டிய வனப்பகுதிகளில் முகாமிட்டு, இரவில் மாக்கமூலா, குனில், அல்லுார் பகுதிகளுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. மாக்கமூலா, மைசூரு தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி யானைகள் கடந்து செல்வதால், ஓட்டுனர்கள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். வனத்துறையினர் தொடர்ந்து இவைகளை கண்காணித்து விரட்டினாலும் மீண்டும் வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் யானையால் சேதமடைந்த அகழியை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், புத்துார் வயல்பகுதியில் ஆட்டோவில் சென்றவர்களை யானை விரட்டியது. சீன கொல்லி பகுதிக்கு வந்த யானை, சிவராஜ் என்பவர் வீட்டின் முன்புறம் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றது. வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதிகளில் வன ஊழியர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து யானையை விரட்டி வருகின்றனர். இரவில், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். யானை நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை