மேலும் செய்திகள்
நெற்பயிரை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள்
19-Sep-2024
கூடலுார் : கூடலுார் பார்வுட் ஆரம்ப சுகாதார நிலையத்தினுள் நுழைந்த, காட்டு யானைகள் மருந்து, தளவாட பொருட்களை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள் ளனர்.கூடலுார் ஓவேலி பார்வுட் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, அக்., மற்றும் நவ., மாதத்தில், இரவில் காட்டு யானைகள், இதனுள் நுழைந்து மருந்துகள் தளவாட பொருட்களை சேதப்படுத்தியது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. மீண்டும், இதுபோன்ற சம்பவம் ஏற்படுவதை தடுக்க, நிலையத்தை சுற்றி சோலார் மின் வேலி அமைக்க வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதற்கான, நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம், பார்வுட் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள், நேற்று, அதிகாலை சுகாதார நிலைய வளாகத்தில் நுழைந்து, கதவை உடைத்து, நிலையத்தினுள் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்துகள், தளவாட பொருட்களை சேதப்படுத்தி சென்றது. அங்கு யாரும் இல்லாததால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்த வனத்துறையினர், சேதமடைந்த பொருட்களை ஆய்வு செய்தனர்.தொடரும் இச்சம்பவத்தால் அச்சமடைந்துள்ள மக்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு, இரண்டு முறை சுகாதார நிலையத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. இதனை தடுக்க, நிலையத்தை சுற்றி அகழி அல்லது சோலார் மின்வேலி அமைக்க வலியுறுத்தப்பட்டது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது, மூன்றாவது முறையாக, காட்டு யானைகள் நிலையத்தில் உள்ேள நுழைந்து மருந்துகள் மற்றும் தளவாட பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதை தடுக்க மருத்துவ துறை மற்றும் வனத்துறை இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,'காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யானைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.
19-Sep-2024