உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலை வழியாக ஊருக்குள் வரும் காட்டு யானைகள்

சாலை வழியாக ஊருக்குள் வரும் காட்டு யானைகள்

கூடலுார்; 'கூடலுார் செம்ப கொல்லி பழங்குடி கிராமத்துக்கு, முதுமலையில் இருந்து சாலை வழியாக, காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர்.கூடலுார், போஸ்பாரா செம்பக்கொல்லி கிராமம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. முதுமலை வனப்பகுதியில் இருந்து, இக்கிராமத்துக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க, வனத்துறை சார்பில், முதுமலை வன எல்லையில் அகழி அமைத்துள்ளனர்.பராமரிப்பு இன்றி சேதமடைந்த அகழியை கடந்து காட்டு யானைகள் ஊருக்குள் வந்து சென்றன. கடந்த ஆண்டு அகழி சீரமைக்கப்பட்டது. காட்டு யானைகள் அகழியை கடந்து ஊருக்குள் வருவது தடுக்கப்பட்டது.இந்நிலையில், மக்களின் நீண்ட கால கோரிக்கை ஏற்று போஸ்டாரா சங்கிலிகேட் முதல் செம்பக்கொல்லி வரையிலான, 3.2 கி.மீ., துாரமுள்ள மண் சாலை, 2.96 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் தார்சாலை அமைக்கப்பட்டது. செம்பக்கொல்லி பழங்குடி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், முதுமலை முதுகுழி, செம்பக்கொல்லி கிராம பகுதிகளில் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் காட்டு யானைகள் வந்து செல்ல துவங்கி உள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கிராம மக்கள் கூறுகையில், 'சேதமடைந்த அகழி சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, காட்டு யானைகள் ஊருக்குள் வருவது தடுக்கப்பட்டது. இந்நிலையில், சில யானைகள் முதுகுழி சாலை, அடுப்பு கூட்டி சாலை வழியாக மீண்டும் கிராமத்துக்குள் வர துவங்கியுள்ளது. இதனை தடுக்க முதுகுழி சாலை நுழைவு வாயில் பகுதியில், சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ