மேலும் செய்திகள்
ஸ்கூட்டரை தட்டி விட்டு பெண்ணை தாக்கிய யானை
22-Apr-2025
கூடலுார், ; முதுமலை, மசினகுடி வனப் பகுதியில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடர்பான பயிற்சி நடந்தது.முதுமலை புலிகள் காப்பகம் உள் வட்டம், வெளிவட்டமாக மசினகுடி கோட்ட வனப்பகுதிகளில் நடப்பு ஆண்டு, பருவமழைக்கும் முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்கி, 22ம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்கான பயிற்சி முகாம், தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்தது. மசினகுடி கோட்டத்துக்கான பயிற்சி முகாம், வனச்சரகர் பாலாஜி தலைமையில் காலை, 11:00 மணிக்கு துவங்கி நடந்தது. தொடர்ந்து, முதுமலை உள் வட்டத்துக்கான பயிற்சி முகாம் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் மதியம், 2:00 மணிக்கு துவங்கி நடந்தது.பயிற்சி முகாமில், நேரடி கணக்கெடுப்பு, கால் தடம் உள்ளிட்ட அடையாளங்கள் உள்ளிட்ட முறையில் கணக்கெடுப்பு முறைகள் குறித்து வனச்சரகர்கள், உயிரியலாளர் சந்தோஷ், பழனி ஆகியோர் வன ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.பயிற்சி முகாமில் முதுமலை புலிகள் காப்பக உட்பட்ட தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலக்கோட்டை வனச்சரகங்கள் வன ஊழியர்கள், மசினகுடி கோட்டத்துக்கு உட்பட்ட மசினகுடி, சிங்காரா, சீகூர் வனச்சரக வன ஊழியர்கள் பங்கேற்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலை, மசினகுடி வனப்பகுதிகளில், 71 நேர்கோடுகளில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள், 16ல் துவங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளுக்கான பணிகள் வழக்கம் போல நடைபெறும்' என்றனர்.
22-Apr-2025