உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வன உயிரின வார விழா விழிப்புணர்வு பேரணி

வன உயிரின வார விழா விழிப்புணர்வு பேரணி

ஊட்டி: ஊட்டி அருகே கல்லட்டியில் உலக வன உயிரின வார விழாவை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. நீலகிரி வனக்கோட்டம் சார்பில் உலக வன உயிரின வார விழாவை ஒட்டி , விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்து பிரசாரம் கல்லட்டியில் நடந்தது. பேரணியை மாவட்ட வன அலுவலர் சஷாங் கஷ்யப் ரவி துவக்கி வைத்தார். அதில், ‘வன விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பது , மனிதர்களுக்கு வன விலங்குகளுக்குமான மோதல்களை தவிர்த்து இணக்கமாக வாழ்வது எவ்வாறு என்பது குறித்தும் ,விழிப்புணர்வு பாடல்கள் வாயிலாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியின் ஒரு பகுதியாக தலைக்குந்தா முதல் பைக்காரா வரை, 14 கி.மீ., துாரத்திற்கு சாலையோரம், வனப்பகுதியில் இருந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு மட்கும் குப்பை, மட்காத குப்பை என, தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டது. நிகழ்ச்சியில், சூழல் மேம்பாட்டு குழுக்கள், பகல் கோடு, பைக்காரா, முத்தநாடு மந்து, அவலாஞ்சி உள்ளிட்ட சூழல் மேம்பாட்டு குழுக்களின் தலைவர்கள் பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை