மேலும் செய்திகள்
குட்டி யானை உயிரிழப்பு வனத்துறை விசாரணை
03-Oct-2026
கூடலுார்: முதுமலை, மசினகுடி சிங்கார சாலையோரத்தில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற ‘பிளாஸ்டிக்’ கழிவுகள் அகற்றப்பட்டன. முதுமலை, மசினகுடி வனக்கோட்டம், சிங்கார வனச்சரகம் சார்பில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு, சாலையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணி நடந்தது. சிங்கார வனச்சரகர் விமல்குமார் தலைமையில் வன ஊழியர்கள், உள்ளூர் சுற்றுலா ஜீப் ஓட்டுநர்கள் இணைந்து சிங்கார சாலையோரத்தில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றினர். தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களால் மண் வளம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வனவிலங்குகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், ஊட்டி அரசு கல்லுாரி பேராசிரியர் ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.
03-Oct-2026