உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் கார் கவிழ்ந்து பெண் பலி; சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

ஊட்டியில் கார் கவிழ்ந்து பெண் பலி; சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

ஊட்டி; ஊட்டிக்கு சுற்றுலா வந்த கார், லாரியில் மோதி கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் மோகித்சிங், 40, மனைவி மோனிஷா,36. இவர்களுக்கு, 6 வயதில் மகனும்; 4 மாத கை குழந்தையும் உள்ளனர். மோகித்சிங் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர் தனது உறவினர்களுடன் இரண்டு காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். ஒரு காரில் மோகித்சிங் மற்றும் மனைவி, நான்கு மாத குழந்தை, மாமனார், மாமியார் இருந்தனர். மற்றொரு காரில் அவருடைய உறவினர்கள் மற்றும் மோகித் சிங்கின், 6 வயது குழந்தை இருந்தனர். இந்நிலையில், தலைகுந்தா பகுதியில் இருந்து, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி சாலையில் வந்தபோது, மோகித்சிங் ஓட்டி வந்த காரும், எதிரே வந்த லாரியும் மோதிக்கொண்டன. கார் பின்னோக்கி சென்று, 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலின் பேரில்,தீயணைப்பு துறையினர், போலீசார் அங்கு வந்து காரில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்தல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். இந்த விபத்தில் மோனிஷா தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்ற நான்கு பேருக்கு, அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. புதுமந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி