உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுமியை ஏமாற்றி இரண்டாவது திருமணம்; போக்சோவில் தொழிலாளி கைது

சிறுமியை ஏமாற்றி இரண்டாவது திருமணம்; போக்சோவில் தொழிலாளி கைது

ஊட்டி; ஊட்டியில், 16 வயது சிறுமியை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதிக்கு, 16 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர், 10ம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாணவியை காணவில்லை. பதறிப் போன பெற்றோர், ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நஞ்சநாடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி, ராஜன்,35, என்பவர் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. சிறுமிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டு ஊருக்கு அழைத்து வந்தார். தகவலின் பேரில், ஊட்டி ஊரக மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் ராஜனிடம் விசாரணை நடத்தினர். அதில், 'ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக அவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்,' என்பது தெரியவந்தது. தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை