மேலும் செய்திகள்
வனவிலங்கு வார விழா; சாலையோர குப்பை அகற்றம்
06-Oct-2025
கூடலுார்: முதுமலை, மசினகுடி வனப்பகுதியில், அன்னிய செடிகள் அகற்றும் பணியில், ஈடுபட்டிருந்த தொழிலாளி, 'புஷ் கட்டரின் உடைந்த பிளேடு நெஞ்சில் குத்தியதில் உயிரிழந்தார். முதுமலை மசினகுடி கோட்டம், மசினகுடி வனச்சரகம் மார்க்கன் பேட்டா வனப்பகுதியில், கூடலுார் புத்துார் பகுதியை சேர்ந்த சதீஷ், 30, உட்பட 8 பேர் நேற்று, அன்னிய செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம், 2:15 மணிக்கு, சதீஷ், செடிகளை வெட்ட பயன்படுத்தி கொண்டிருந்த புஷ் கட்டரின் பிளேட் திடீரென உடைந்து, அவர் நெஞ்சில் குத்தியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக, தெப்பக்காடு ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், இறந்து விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவர் உடல் கூடலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மசினகுடி வனச்சரகர்கள் ராஜன், தனபால் சுரேஷ்பாபு விசாரித்தனர். மசினகுடி இன்ஸ்பெக்டர், சுப்புரத்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
06-Oct-2025