உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி மருத்துவமனையில் எக்ஸ்----ரே பிரிவு துவக்கம்

கோத்தகிரி மருத்துவமனையில் எக்ஸ்----ரே பிரிவு துவக்கம்

கோத்தகிரி: கோத்தகிரி அரசு மருத்துவமனையில் 'எக்ஸ்-ரே' பிரிவு துவக்கப்பட்டது.கோத்தகிரி அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக, எக்ஸ்-ரே இயந்திரம் இல்லாமல் இருந்தது. இதனால்,உள்ளூர் மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். மக்களின் இந்த கோரிக்கையை ஏற்ற மாநில அரசு, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய எக்ஸ்-ரே இயந்திரத்தை வழங்கியது.மேலும், அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான, 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான வென்டிலேட்டர், இ.சி.ஜி., இயந்திரம், மயக்கமருந்து செலுத்தும் கருவிகளை வழங்கியது. இந்நிலையில், மருத்துவமனையை ஆய்வு செய்த அரசு தலைமை கொறடா எக்ஸ்ரே இயந்திரத்தை இயக்கி வைத்தார். தொடர்ந்து, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் கூறுகையில், 'எதிர்வரும் நாட்களில், 'டயாலிசஸ்' மற்றும் இதய நோயாளிகளை காப்பாற்றுவதற்கு, அதிநவீன சிகிச்சைக்கான மருந்துவ உபகரணங்கள் வழங்கவும், தேவையான காலி பணியிடங்கைளை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ