போக்சோவில் வாலிபர் கைது
குன்னுார்; குன்னுார் அருகே ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம்,25, என்பவர், 16 வயது மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்துள்ளார். சிறுமி ஊட்டி மகப்பேறு மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்ற போது, 10 வார கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. தகவலின் பேரில், குழந்தைகள் நல பாதுகாப்பு துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, குன்னுார் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.