மேலும் செய்திகள்
ராணுவ தேர்வுக்கு வந்த இளைஞர்கள் மீது தடியடி
11-Nov-2024
கூடலுார்; கூடலுார் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில், விளையாட்டு மூலம் இளைஞர்களை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கு நடந்தது. பயிற்சி மையத்தின் முதல்வர் சாஜி தலைமை வகித்தார்.கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு போட்டிகள் குறித்த ஆர்வம் குறைந்து வருகிறது. இதனை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. உடல், மனநல ஆரோக்கியம், தீயபழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க, இளைஞர்கள் விளையாட்டு பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் மூலம் தங்களை மேம்படுத்தி கொள்ள முடியும். விளையாட்டில் சாதிப்பதன் மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கும் முன்னுரிமை கிடைக்கும்,''என்றார்.'ஆல் தி சில்ட்ரன்ஸ்' அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
11-Nov-2024