மேலும் செய்திகள்
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி மரணம்
17-Jun-2025
கூடலுார்; கூடலுார் ஓவேலி அருகே, மழையின் போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் சுவர் இடிந்து, விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.கூடலுார் ஓவேலி ஆரூட்டுப்பாறையை சேர்ந்தவர் வினோத்,32. இவர் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், இரவு வெளியே சென்றவர், நேற்று மதியம் வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் அவரை தேடினர்.அப்போது, வீட்டின் அருகே உள்ள ஓர் அறையில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது மண் சுவர் இடிந்து, பரிதாபமாக உயரிழந்து கிடந்தது தெரிய வந்தது.கூடலுார் துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய்ஆய்வாளர் ராம்குமார், கிராம நிர்வாக அலுவலர்சண்முகம் ஆகியோர் ஆய்வு செய்தனர். நீயூஹோப் எஸ்.ஜ., பாலாஜி இறந்தவர்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
17-Jun-2025