உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / கூடுதல் விலைக்கு உர விற்பனையா? ஃபோனில் புகார் தெரிவிக்க வேளாண் துறை அழைப்பு

கூடுதல் விலைக்கு உர விற்பனையா? ஃபோனில் புகார் தெரிவிக்க வேளாண் துறை அழைப்பு

பெரம்பலூர்: 'பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தனியார் உர விற்பனை நிலையங்களில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்' என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மிகாமல் உரம் விற்க அறிவுறுத்தப்படுகிறது. விற்கும் உரத்திற்கு கட்டாயம் பில் வழங்க வேண்டும். விலைப்பட்டியலை விவசாயிகளுக்கு தெரியும் வண்ணம் வைத்திருக்க வேண்டும். தவறும் உர விற்பனை நிறுவனம் மீது கடுமையான மேல் நடவடிக்கை எடுக்கப்படும். உர விற்பனையில் ஏதேனும் தவறு நடப்பதாக விவசாயிகளுக்கு தெரிந்தால் வேளாண் இணை இயக்குநர் மொபைல் எண்-90470-72743 வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுபாடு) மொபைல் எண்- 94439-54646, வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) மொபைல் எண்- 990470-72756 ஆகிய நம்பரில் உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் கூறப்படும் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை