உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / சாதாரண காரியகர்த்தா நாட்டின் பிரதமர்: சரத்குமார்

சாதாரண காரியகர்த்தா நாட்டின் பிரதமர்: சரத்குமார்

பெரம்பலுார், பெரம்பலுார் மாவட்ட பா.ஜ., சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில், நடிகர் சரத்குமார் பங்கேற்று பேசியதாவது: தமிழக முழுதும் உள்ள 234 சட்டசபை தொகுதியிலும், தி.மு.க., சார்பில் போட்டியிடுவதற்கு, முதல்வர் குடும்பத்திலேயே ஆட்கள் உள்ளனர். தி.மு.க.,வில் வேறு யாரும் தலைமை பொறுப்புக்கு வர முடியாது. அங்கு எவ்வளவு உழைத்தாலும், வெளியார் யாரும் மேல் நிலைக்கு வர முடியாது. ஒரு சாதாரண காரியகர்த்தா, நாட்டின் பிரதமராக வர முடியும் என்ற ஒரே கட்சி பா.ஜ., தான் என்பதை மறந்து விடக்கூடாது. அதுதான் உண்மையான ஜனநாயகம். அந்த இயக்கத்துடன் எங்களை இணைத்துக் கொண்டதை நினைத்து பெருமைபடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை