உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / எப்போதும் தனித்தே போட்டி உறுதியாக இருக்கிறார் சீமான்

எப்போதும் தனித்தே போட்டி உறுதியாக இருக்கிறார் சீமான்

பெரம்பலுார்: ''நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துப் போட்டியிடும்,'' என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.அரியலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: 'எக்ஸ்' தளத்தில் இருந்து வெளியேறிய திருச்சி எஸ்.பி., வருண்குமார் ஐ.பி.எஸ்.,சுக்கு வாழ்த்துக்கள். பா.ஜ.,வில் 100 சதவீதம் ஹிந்துக்கள் இருப்பதாக, அக்கட்சியினர் கூறுகின்றனர். தி.மு.க.,வில், 90 சதவீதம் ஹிந்துக்கள் இருப்பதாக, முதல்வர் கூறுகிறார். இரண்டுக்கும் 10 சதவீதம் தான் வித்தியாசம். ஆக தி.மு.க.,வும், பா.ஜ.,வும் வேறு வேறு அல்ல.விஜய் கட்சியின் மாநாட்டுக்கு என்னை அழைக்க மாட்டார்; அழைக்கவும் கூடாது. நாம் தமிழர் எப்போதும் தனித்துப் போட்டி தான் என நான் முடிவெடுத்து இருக்கிறேன். அதேபோல், தேர்தல் காலத்தில், என் தம்பிகள் என்ன முடிவு எடுக்கின்றனர் என்பதைப் பொறுத்து யோசிக்கலாம். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட 50 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ