உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / 100 நாள் வேலை முறைகேடு பணியாளர்கள் 4 பேர் நீக்கம்

100 நாள் வேலை முறைகேடு பணியாளர்கள் 4 பேர் நீக்கம்

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், தொண்டமாந்துறை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் புதிய குளம் அமைக்கும் பணி நடந்தது. இதில், முறைகேடு நடப்பதாக இக்கிராம பொதுமக்கள் திட்ட இயக்குனரிடம் புகார் செய்தனர்.தொடர்ந்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள் விசாரித்தார். இதில், பணித்தள பொறுப்பாளர்களான பிரியா, சாலினி, தனசீலி மற்றும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் விஜயகுமார் ஆகிய தற்காலிக பணியாளர்கள் முறைகேடு செய்தது தெரியவந்தது.தொடர்ந்து, நால்வரையும் பணிநீக்கம் செய்து, வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமணியன் உத்தரவிட்டுள்ளார். தொண்டமாந்துறை ஊராட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, தொடர் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை