உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / கடப்பாறையால் தாக்கி 37 சவரன் கொள்ளை

கடப்பாறையால் தாக்கி 37 சவரன் கொள்ளை

பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, மூதாட்டியை கடப்பாறையால் தாக்கி 37 சவரன் தங்க நகை மற்றும் 12,000 ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை மங்கலமேடு போலீசார் தேடி வருகின்றனர்.பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தாராபீ, 65, இவர், நேற்று முன்தினம் இரவு அவரது மெத்தை வீட்டில் தன் மகள் அஷரப்பீ, 29, என்பவருடன் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவை இரும்பு ராடு மூலம் தகர்த்து உள்ளே புகுந்த, முகமுடி அணிந்திருந்த கொள்ளையர்கள் நான்கு பேர் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி, கடப்பாறை மற்றும் கட்டையால் தாக்கி, வீட்டில் பிரோவில் இருந்த 37 சவரன் தங்க நகைகளையும், 12,000 ரூபாயை கொள்ளையடித்துக் தலைமறைவாகினர். தகவலறிந்த மங்கலமேடு போலீசார் வழக்கு பதிந்து, முகமுடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !