உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / கல்லுாரி பேராசிரியை மாணவனுடன் ஓட்டம்

கல்லுாரி பேராசிரியை மாணவனுடன் ஓட்டம்

பெரம்பலுார்:கல்லுாரி பேராசிரியை மாணவனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் புதுகாலனியைச் சேர்ந்தவர் ஜான்ஜெபராஜ். இவரது மனைவி சீலியா கரோலின், 27; பெரம்பலுார் தனியார் கல்லுாரி பேராசிரியை. தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.கடந்த, 24ம் தேதி கல்லுாரிக்கு சென்ற சீலியா கரோலின் வீடு திரும்பவில்லை. ஜான் ஜெபராஜ் பெரம்பலுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், சீலியா கரோலினும், அதே கல்லுாரியில் பி.காம்., மூன்றாமாண்டு படிக்கும், 20 வயது மாணவனும் நெருங்கி பழகியது தெரியவந்தது. இருவரும் தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில், வெளியூர் சென்று தங்கி இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Natchimuthu Chithiraisamy
பிப் 14, 2025 12:38

இந்த கெட்ட செய்திகள் வருவது மற்றவர்களை ஊக்குவிக்க அல்ல. இந்த கேவலம் இனி நடக்காமல் இருக்க


சமீபத்திய செய்தி