உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி சாதனை

தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி சாதனை

பெரம்பலுார்; பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தேசிய தரவரிசை பட்டியலில் 40வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி 10 ஆண்டுகளாக தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற முதல் கல்லுாரியாகவும், தேசிய தர நிர்ணய குழுவின் மறுமதிப்பீட்டில் 7 ஆண்டுகளாக “அ++” சான்றிதழ் அங்கீகாரத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்ட தேசிய தரவரிசை பட்டியலில், கல்லுாரிகள் பிரிவில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறந்த கல்லுாரிக்கான 100 தரவரிசைக்குள், 2023ம் ஆண்டு 74வது இடத்தையும், 2024ம் ஆண்டு 44வது இடத்தையும், 2025ம் ஆண்டு 40வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், 2025ம் ஆண்டு மாநில அளவில் 9வது இடத்தையும், மாநில மகளிர் கல்லுாரி அளவில் 2ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஆண்டுதோறும் கல்லுாரியின் தரம் உயர்ந்து வருவதை பாராட்டி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், கல்லுாரியின் முதல்வர் உமாதேவி பொங்கியா, ஒருங்கிணைப்பாளர் தீபலட்சுமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கிருத்திகா, சங்கீதா மற்றும் பேராசிரியர்களை பாராட்டி, இனிப்பு வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, 'பெண்கள் கல்வி பெற்று மேம்பாடு அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 1996ம் ஆண்டு பெரம்பலுாரில் முதன் முறையாக மகளிர் கல்லுாரியை துவங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை