மேலும் செய்திகள்
வாகனம் மோதி வாலிபர் பலி
21-Sep-2025
பெரம்பலுார்: போலீஸ் வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ், 55. விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு தன் டூ --- வீலரில், ஹெல்மெட் அணியாமல் கிருஷ்ணாபுரம் சென்றுவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார். தாழைநகர் அருகே சென்றபோது, அரும்பாவூர் எஸ்.ஐ., சிற்றரசு சென்ற போலீஸ் வாகனம், ரங்கராஜ் டூ - வீலர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட ரங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, அரும்பாவூர் போலீசார், ஜீப் டிரைவரான ஏட்டு பிரபுவிடம் விசாரிக்கின்றனர்.
21-Sep-2025