மேலும் செய்திகள்
உடல் உறுப்புகள் வேண்டி 7797 பேர் காத்திருப்பு
24-Sep-2024
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் ஜெகதீசன்,23; இவர், சாலை விபத்தில் படுகாயமடைந்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு, சிகிச்சை பலனிக்காமல், மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து, உடல் உறுப்புகளை தானமாக அளிக்க, அவரது பெற்றோர் சம்மத கடிதம் கொடுத்ததையடுத்து, அவரது உறுப்புகள் தானமாக எடுக்கப்பட்டு, அதன்பின், ஜெகதீசனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.கீழக்கணவாய் கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெகதீசனின் உடலுக்கு, பெரம்பலுார் கலெக்டர் கிரேஸ்பச்சாவ், அரசின் சார்பில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில், டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், பெரம்பலுார் தாசில்தார் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
24-Sep-2024