உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / அரசு பஸ் டிரைவரை தாக்கிய த.வெ.க., நிர்வாகிகள் மூவர் கைது

அரசு பஸ் டிரைவரை தாக்கிய த.வெ.க., நிர்வாகிகள் மூவர் கைது

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே அரசு பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய த.வெ.க., நிர்வாகிகள் மூவரை மங்களமேடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.பெரம்பலுார் மாவட்டம், கிளியூர் கிராமத்தில் இருந்து பெரம்பலுார் நோக்கி இரவு 7 மணியளவில் 1 எப் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, மது போதையில் டூவீலரில் வந்த மூன்று வாலிபர்கள், தங்களுக்கு வழி விடாமல் சென்றதாக கூறி தேவையூர் கிராமம் அருகே, பஸ்சை வழிமறித்து டிரைவர் மோகனை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து, பயணிகள் மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மங்களமேடு போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து விசாரித்ததில் அவர்கள் மூவரும் தேவையூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்,36, சரவணன்,27, ஜெகதீஷ்,33, என்பதும் இவர்கள் மூவரும் த.வெ.க., கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. காயமடைந்த டிரைவர் மோகன் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த பஸ் கண்டக்டர் பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை