மேலும் செய்திகள்
ஆந்திர முதியவருக்கு 'காப்பு'
04-May-2025
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, மின்சாரம் செலுத்தி, மீன் பிடிக்க முயன்ற இருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர். பெரம்பலுார் மாவட்டம், தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ரஞ்சித்குமார், 24. இதே கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் தினேஷ், 27. நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தொண்டமாந்துறை கிராமத்தில் உள்ள கல்லாற்றில் தேங்கி நின்ற நீரில் சட்ட விரோதமாக மின்சாரம் செலுத்தி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது, மின்சாரம் தாக்கியதில் இருவரும் இறந்தனர். இதுகுறித்து, அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
உயர் அழுத்த மின்சாரத்தை, தேங்கி கிடக்கும் நீரில் செலுத்தும் போது, அந்த நீரில் மின்சாரம் பாய்ந்து, அதில் உள்ள மீன்கள் செத்து மிதக்கும். அந்த மீனை எடுத்துச் செல்வர். வழக்கமாக நீரில் மின்சாரம் பாயும் போது, அதனுள் இறங்கி, மீன் பிடிக்க மாட்டார்கள்; மறதியாக மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் இறங்கியதால், மின்சாரம் தாக்கி இருவரும் பலியாகினர்.
04-May-2025