உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புதுகை பூங்காவில் நுாதனமாக நுழைவு கட்டணம் வசூல்

புதுகை பூங்காவில் நுாதனமாக நுழைவு கட்டணம் வசூல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லுாரி எதிரே, 4 ஏக்கரில், 9 கோடி ரூபாய் செலவில் பல வசதிகளுடன் கலைஞர் பூங்கா உள்ளது. காலையில் நடைபயிற்சிக்கும், மாலை 4.00 மணியில் இருந்து இரவு 8;00 மணி வரை பொழுது போக்குக்கும் பூங்கா திறக்கப்படுகிறது.இந்த பூங்காவுக்கு நுழைவுக்கட்டணம் கிடையாது. ஆனால், லோக்சபா தேர்தல் முடிந்ததும், ஒவ்வொருவருக்கும் தலா, 20 ரூபாய் வீதம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதுபோக, சிறுவர்களுக்கான ரயில், கார் ஓட்டுதல், கிரிக்கெட் விளையாட்டு, '3 டி' படம் பார்த்தல் போன்றவற்றுக்கு தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனால், தகவல் பெறும் உரிமை சட்ட மனுவின் கீழ், மாநகராட்சி ஆணையர் அளித்துள்ள பதிலில், எவ்வித கட்டணமும் கலைஞர் பூங்காவில் வசூலிக்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.பூங்காவிற்குள் நுழையும் போது, 20 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும். அதை, பூங்கா உள்ளே நுழைந்ததும், பெற்றுக் கொள்வர். இதனால், டிக்கெட் வாங்கியதற்கான ஆதாரம் யாரிடமும் இருப்பதில்லை.எனவே, இந்த விவகாரம் தொடர்பாக, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை