உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / கிளப், மனமகிழ் மன்றம் பெயரில் மது விற்க பொதுமக்கள் எதிர்ப்பு

கிளப், மனமகிழ் மன்றம் பெயரில் மது விற்க பொதுமக்கள் எதிர்ப்பு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை, அறந்தாங்கி சாலையில் அசோக்நகர் பஸ் ஸ்டாப் அருகே, எப்.எல்., 2 என்ற உரிமத்தில், 'கிளப்' என புதிய பெயர் சூட்டப்பட்ட மது விற்பனையகம் மற்றும் பார் திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், மாவட்டத்தில் சில இடங்களில், கிளப் மற்றும் மனமகிழ்மன்றம் என்ற பெயர்களிலான இடங்களில் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இங்கு விற்கப்படும் மதுபானங்களின் விலை அதிகம். அதுபோல, டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கும் நேரத்திற்கு முன் திறந்து, மூடப்படும் நேரத்திற்கு பிறகும் செயல்படும் வகையில் இந்த கிளப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கிளப்பை திறந்தால், பள்ளி செல்லும் மாணவ - மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மக்களிடம், கணேசநகர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சு நடத்தி, 'மேலதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம்' என உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, பொதுமக்கள் கலைந்தனர். இதனால், சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதற்கிடையே, நேற்று முன்தினம், புதுக்கோட்டை நிருபர்கள், அமைச்சர் ரகுபதியிடம், 'தனியார் நடத்த உள்ள கிளப் போன்ற மது விற்கும் இடங்களில் விலையும் அதிகம். 'திறந்து, மூடும் நேரமும் அதிகமாக உள்ளதே' என கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்தபடியே பதிலளித்த அமைச்சர், 'டெக்கரேஷன் எல்லாம் செய்துள்ளார்கள் அல்லவா... விலை அதிகமாக விற்கும் மதுக்கடைக்கு ஏன் போகிறீர்கள்...' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ