மதமாற்றத்தில் ஈடுபட்டோர் போலீசிடம் ஒப்படைப்பு
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகம் வளாகம் முன், இரண்டு ஆண்கள் மற்றும் பெண் சாலையில் செல்வோரிடம், கிறிஸ்துவ அமைப்பின் நோட்டீஸ்கள் மற்றும் புத்தகங்களை அளித்து, 'எங்கள் மதத்தில் சேருங்கள்' என்று கூறி, மூளைச் சலவை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.தகவல் அறிந்த ஹிந்து முன்னணி அமைப்பினர், அங்கு சென்று, அந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசில் ஹிந்து முன்னணியினர் ஒப்படைத்தனர்.மத மாற்றத்தில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஹிந்து முன்னணியினர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின், போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டனர்.