பள்ளி வேன் -- அரசு பஸ் மோதலில் 21 பேர் காயம்
புதுக்கோட்டை, :தனியார் பள்ளி வாகனம் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மாணவர்கள், 21 பேர் காயம்டைந்தனர்.புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டியில் முருகேஸ்வரா தனியார் நர்சரி பள்ளி மாணவர்களை வீட்டில் விடுவதற்காக பள்ளி வேன் நேற்று சென்றது. புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள்சத்திரம் பகுதியில், திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் திரும்பிய போது, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில், பள்ளி வாகனத்தில் சென்ற 21 மாணவர்கள் காயமடைந்தனர். அங்கிருந்தோர் மாணவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மாணவர்களில், காவிரி நகர் மனோரஞ்சித் என்ற மூன்றாம் வகுப்பு மாணவன் தலையில் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.