மீனவர் வலையில் சிக்கிய ஆண் உடல்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி மீனவர்கள், நாட்டு படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து, 20-க்கும் மேற்பட்டோர் கரையில் இருந்து வலையை இழுத்து சிக்கிய மீன்களைப் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலையில், கடலில் விரிக்கப்பட்டிருந்த வலையை படகுகளை பயன்படுத்தாமல், 20 பேர் சேர்ந்து கரைக்கு இழுத்தனர்.வலையை இழுப்பதில் மிகவும் கடினமாக இருந்ததால், நிறைய மீன்கள் சிக்கி இருக்கும் என்ற எண்ணத்தில் மீனவர்களும் வலையை ஆர்வமுடன் இழுத்தனர். வலையை கரைக்கு கொண்டு வந்தபோது, 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல், வலையில் சிக்கி இருந்தது. அவரது, உடலில் இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் இரண்டு கற்கள் கட்டப்பட்டிருந்தன.மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார், அந்த உடலை கைப்பற்றி விசாரித்தனர். சடலமாக கிடந்த இளைஞர் அணிந்திருந்த சட்டை காலரில் உள்ள டெய்லர் கடை ஸ்டிக்கரில், 'சேகர், கோட்டைப்பட்டணம்' என இருந்தது.