மின்சாரம் பாய்ந்து 7ம் வகுப்பு மாணவன் பலி
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பேராம்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி குமார். இவரது மகன் தர்ஷன், 12. இவர், சூரியூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறையால் வீட்டில் இருந்த சிறுவன், ஜன்னல் மீது ஏறி விளையாடி கொண்டிருந்தார். அப்போது, சேதமடைந்த மின் ஒயர் மீது, சிறுவனின் கை எதிர்பாராத விதமாக பட்டதால் மின்சாரம் பாய்ந்து, துாக்கி வீசப்பட்டார். அவரை விராலிமலை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் துாக்கி சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார். மாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.