உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புதுகை அருகே மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு

புதுகை அருகே மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு

புதுக்கோட்டை:தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, படப்பனார் வயலை சேர்ந்தவர் பார்த்திபன், 28. இவர், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கீரமங்கலம் அருகே, மேற்பனைக்காட்டில் புதிய மின்மாற்றி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், புதிய மின்மாற்றியின் சேவையை துவங்கி வைத்தார். அதன் பின், பார்த்திபன் உள்ளிட்ட மின் பணியாளர்கள் மின்மாற்றியில், மின் வினியோகத்தை முறைப்படுத்தும் பணியில் ஈடுட்டனர். மின் மாற்றியில் ஏறி பணியில் ஈடுபட்ட பார்த்திபன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !