உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / மாஜி எம்.எல்.ஏ., உட்பட மூவர் விபத்தில் காயம்

மாஜி எம்.எல்.ஏ., உட்பட மூவர் விபத்தில் காயம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கெண்டையன்பட்டியில் நடைபெற்ற அ.தி.மு.க., 'பூத்' கமிட்டியில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜு, 68, உட்பட பலர் பங்கேற்றனர்.பின், அங்கிருந்து, துவார் பூத் கமிட்டியில் கலந்து கொள்வதற்காக, ராஜூ சென்ற கார், கெண்டையன்பட்டி பஸ் ஸ்டாப் எதிரே, பழனி, 50, என்பவர் ஓட்டி வந்த மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், எம்.எல்.ஏ., ராஜு மற்றும் கார் டிரைவர் ரமணி, 64, மற்றும் பழனி ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். அப்போது, அங்கு வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காயம்பட்டவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை