உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மொபைலில் நடிகை படம் : காசு பறிபோகுதே

மொபைலில் நடிகை படம் : காசு பறிபோகுதே

ராமநாதபுரம் : வயது முதிர்ந்த மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கும், நடிகை படத்தை அனுப்பி, கட்டணம் பிடித்தம் செய்யும் கொடுமை தொடர்கதையாக உள்ளது. பரபரப்பு மிகுந்த அன்றாட வாழ்க்கையில் வாகனத்தில் செல்லும் போதோ, அலுவலகத்தில் இருக்கும் போதோ புதிய எண்ணில் இருந்து நமது மொபைல் போனுக்கு அழைப்பு வரும். 'என்னமோ, ஏதோ' என, போனை எடுத்தால், ' 'உங்களுக்கு இந்த பாட்டு வேண்டுமா, லவ் டிப்ஸ் வேண்டுமா?' என, ஒரு பெண் கொஞ்சல் குரலில் கேட்பார். இதில், கேன்சல் பட்டனை அழுத்தினால் கூட, கூடுதல் சேவை 'ஆக்டிவேட்' ஆகி பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. முதியவர்களுக்கும் அரைகுறை உடைகளுடன் நடிகைகளின் படங்களை அனுப்பி, கட்டணம் வசூலிக்கின்றனர். 'சேவையை' உடனே துவக்கும் நிறுவனங்கள், ரத்து செய்ய அலைக்கழிக்கின்றனர். இதனால், நடிகை பட 'சேவையை' நிறுத்த முடியாமல் பணத்தை பறிகொடுக்கின்றனர். வாடிக்கையாளருக்கு 'என்னமோ ஏதோ' நிலை தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ