உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குழாயில் காற்று தான் வருதுங்க; தனுஷ்கோடியில் மக்கள் அவதி

குழாயில் காற்று தான் வருதுங்க; தனுஷ்கோடியில் மக்கள் அவதி

ராமேஸ்வரம்: -தனுஷ்கோடியில் உள்ள நகராட்சி குடிநீர் குழாயில் தண்ணீர் இன்றி வெறும் காற்று தான் வருது என சுற்றுலாப் பயணிகள் புலம்புகின்றனர்.ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் புயலில் இடிந்த சர்ச், கோயில், ரயில்வே கட்டடங்கள் மற்றும் அரிச்சல்முனை கடற்கரை, கடல் அலையை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். இரு மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் தொட்டிகள் வைத்து, லாரிகளில் கொண்டுவந்து குடிநீரை தொட்டியில் ஊற்றி நிரப்பினர்.இதனால் சுற்றுலா பயணிகள் தாகம் தணித்தனர். துவக்கத்தில் தொட்டியில் குடிநீரை ஊற்றிய நகராட்சி ஊழியர்கள் காலப்போக்கில் கண்டு கொள்ளவில்லை. தற்போது தொட்டியில் குடிநீர் இன்றி வறண்டு கிடப்பதால், விவரம் தெரியாமல் சுற்றுலா பயணிகள் குழாய் திறக்கின்றனர். குழாயில் இருந்து காற்று மட்டும் தான் வருது, தண்ணீரை காணோமே என சுற்றுலா பயணிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி