உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறைச்சாலை வசதி இல்லாததால் கைதிகளை.. பாதுகாப்பதில் சிரமம்; ஊர் ஊராக அலைந்து அவதிப்படும் போலீசார்

சிறைச்சாலை வசதி இல்லாததால் கைதிகளை.. பாதுகாப்பதில் சிரமம்; ஊர் ஊராக அலைந்து அவதிப்படும் போலீசார்

திருவாடானை: திருவாடானையில் சிறைச்சாலை மூடப்பட்டதால் சப்-டிவிஷனில் கைது செய்யப்படும் கைதிகளை அடைக்க பல்வேறு சிறைகளை தேடி போலீசார் அலைந்து அவதிப்படுவதால் கைதிகளை பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுவதால் சின்னக் கீரமங்கலத்தில் புதிய சிறைச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருவாடானையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சிறைச்சாலை இருந்தது. திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி போன்ற போலீஸ் ஸ்டேஷன்களில் கைது செய்யப்படுபவர்கள் இங்கு அடைக்கப்பட்டனர். கட்டடம் பழுதடைந்ததால் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் இப்பகுதி போலீஸ்ஸ்டேஷன்களில் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை ராமநாதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலையில் மதுரைக்கு அழைத்து செல்கின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் கைதிகள் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்படுகின்றனர். மதுரை, புதுக்கோட்டை என கைதிகளை அழைத்து செல்லும் போது பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. நீண்ட துாரம் பயணிக்கும் போது போலீசார் மட்டுமல்லாமல் கைதிகளும் சிரமம் அடைகின்றனர் என்றனர்.கடந்த ஆண்டு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் புதிய சிறைச்சாலை கட்ட இடத்தை பார்வையிட்டனர். ஆனால் அத்திட்டமும் கிடப்பில் உள்ளது. எனவே புதிய சிறைச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை