உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் 11 டம்மி வெடி குண்டுகள் சிக்கின

ராமேஸ்வரத்தில் 11 டம்மி வெடி குண்டுகள் சிக்கின

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரத்தில் நடந்த கடல் பாதுகாப்பு ஒத்திகையில் 16 போலி பயங்கரவாதிகளை கைது செய்து 11 டம்மி வெடிகுண்டுகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.மன்னார் வளைகுடா கடல், பாக் ஜலசந்தி கடலில் அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க ஆண்டுக்கு ஒருமுறை 'சாகர் கவாச்' எனும் கடல் பாதுகாப்பு ஒத்திகையில் மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் ஈடுபடுவார்கள். அதன்படி நேற்று ராமேஸ்வரம் கடலில் இந்திய கடலோர காவல்படை, மரைன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய இரு படகை பிடித்து சோதனையிட்ட போது சுங்கத்துறை, இந்திய கடற்படை வீரர்கள், மரைன் போலீசார் உட்பட 16 பேர் போலி பயங்கரவாதிகளாக இருந்தது தெரிந்தது.அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 11 டம்மி வெடி குண்டுகளை கைப்பற்றினர். இந்தக் கடல் பாதுகாப்பு ஒத்திகை இன்றும் (செப்.6) நடக்கும் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி