உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பனில் செங்கல் குவியலில் புகுந்த கார்

பாம்பனில் செங்கல் குவியலில் புகுந்த கார்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செங்கல் குவியலில் கார் புகுந்ததில் ஒருவர் காயம் அடைந்தார்.தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 52. இவர் மனைவி, உறவினர்கள் 5 பேருடன் காரில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தார். காரை கிருஷ்ணமூர்த்தி ஓட்டினார். நேற்று அதிகாலை பாம்பன் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி சென்றார்.அப்போது எதிர்பாராமல் கார் கட்டுப்பாட்டை இழந்து வலது புறம் சென்றதில் ரோட்டோரம் குவிக்கப்பட்டிருந்த செங்கலுக்குள் புகுந்தது. இதில் காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரின் முன்பகுதி சேதமடைந்தது. பாம்பன் போலீசில் கிருஷ்ணமூர்த்தி தரப்பினர் புகார் அளிக்கவில்லை.ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செங்கல், ஜல்லி கற்கள், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை குவித்து வைத்து வியாபாரிகள் விற்கின்றனர். இதனால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி