உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடி அருகே கோயில் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கடலாடி அருகே கோயில் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கடலாடி: கடலாடி அருகே ஆப்பனுார் தெற்கு கோட்டை கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. மூலவர்கள் ஜெயமங்கள விநாயகர், பர்மா பீலிக்கான் முனீஸ்வரர், அங்காள பரமேஸ்வரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை 2 பிரிவுகளாக பூஞ்சிட்டு மற்றும் சின்ன மாடு வண்டி பந்தயம் நடந்தது. இதில் ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 மாட்டு வண்டி பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகளும், வண்டி ஓட்டிய சாரதிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆப்பனுார் தெற்குகோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை