உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பல்கலை கல்லுாரிகளிடையே இடைநில்லா  ஓட்டப்பந்தயம்

பல்கலை கல்லுாரிகளிடையே இடைநில்லா  ஓட்டப்பந்தயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஒருங்கிணைப்பில் அழகப்பா பல்கலை கல்லுாரிகள் இடையிலான இடைநில்லா திறந்த வெளி ஓட்டப்பந்தயம் நடந்தது. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா துவக்கி வைத்தார். அழகப்பா பல்கலை உடற்கல்வி கல்லுாரி முதலிடம், பல்கலை அறிவியல் கல்லுாரி 2 ம் இடம், சேதுபதி அரசு கல்லுாரி 3ம் இடம், வேலு மனோகரன் மகளிர் கலைக்கல்லுாரி 4ம் இடம் பெற்றனர். செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கலையரங்கத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. அழகப்பா பல்கலை உடற்கல்வி இயக்குனர் நாகநாதன் முன்னிலை வகித்தார். முதல்வர் பாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குநர்கள் செய்யது அம்மாள் கல்லுாரி காளிதாசன், பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி செல்வம், செய்யது ஹமீதா கலை-அறிவியல் கல்லுாரி தவசிலிங்கம் பேசினர். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் சானாஸ் வாழ்த்து தெரிவித்தனர். கல்லுாரி உதவிப்பேராசிரியர் வள்ளி விநாயகம், நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா, உடற்கல்வி இயக்குனர் சவேரியார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை