உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின் கம்பி திருட முயன்ற வாலிபர் உடல் கருகி பலி

மின் கம்பி திருட முயன்ற வாலிபர் உடல் கருகி பலி

உச்சிப்புளி:ராமநாதபுரம் -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், பிரப்பன் வலசை பாம்பன் சுவாமிகள் கோவில் வழியாக உயர் மின்னழுத்த வழித்தடம் உள்ளது. இங்குள்ள மின் கம்பத்தில் ஏறி, காப்பர் மின் கம்பியைஅடையாளம் தெரியாத வாலிபர் நேற்று காலை திருட முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் உடல் கருகி பலியானார். உச்சிப்புளிபோலீசாரின் விசாரணையில் இறந்தவர் ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன், 35, என்பது தெரிந்தது. இவர் மீது ஏற்கனவே மின் கம்பி திருட்டு வழக்குகள், கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை