பரமக்குடியில் சீரமைக்கப்படாத ரோடு பள்ளத்தில் சிக்கும் வாகனம்
பரமக்குடி: பரமக்குடி போலீஸ் ஸ்டேஷன் அருகில் ரோடு சீரமைக்கப்படாத நிலையில் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கும் நிலை உள்ளது.பரமக்குடி ஆற்றுப்பாலம் துவங்கி போலீஸ் ஸ்டேஷன் வரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டது. இதன்படி போஸ்ட் ஆபீஸ், கூட்டுறவு வங்கி, தனியார் மருத்துவமனைகள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போலீஸ் ஸ்டேஷன் என போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு புதிய ரோடு அமைக்கப்பட்ட நிலையில் குடிநீர் குழாய்க்காக பள்ளம் தோண்டி மூடப்பட்டது. ஆனால் முறையாக ரோடு சீரமைக்கப்படாததால் டூவீலர், ஆட்டோ முதல் ஏராளமான வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி நிற்கிறதுஇதனால் அவ்வப்போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் பள்ளி மாணவிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். மழை நேரங்களில் சகதிக் காடாக மாறுகிறது. போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஏற்பட்ட பள்ளத்தால் அடிக்கடி போலீஸ் வாகனங்கள் சிக்குகின்றன. எனவே நெடுஞ்சாலை, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.