அரசு பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலி
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே ஐந்தினை பூங்கா அருகே அரசு டவுன்பஸ்சும், ஆட்டோவும் மோதியதில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.ராமநாதபுரம் நயினார்கோவில் அருகே தவளைகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாலமுருகன் 43. இவர் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள குவார்ட்டர்சில் தங்கியிருந்தார். நேற்று மதியம் 3:00 மணிக்கு கீழக்கரையிலிருந்து ஆட்டோவை பாலமுருகன் ஓட்டி வந்தார். ராமநாதபுரத்திலிருந்து ரெகுநாதபுரம் சென்ற அரசு டவுன் பஸ் ஆட்டோ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த ஆட்டோ டிரைவர் பாலமுருகனுக்கு அபிராமி என்ற மனைவியும், ஆண், பெண் இரு குழந்தைகள் உள்ளன. திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.