உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க விழிப்புணர்வு

பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க விழிப்புணர்வு

தொண்டி: தொண்டியில் உள்ள காரைக்குடி அழகப்பா கடலோரவியல் கல்லுாரி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தொண்டி அரசு தொடக்கப்பள்ளியில் (கிழக்கு) நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் வரவேற்றார். கல்லுாரி பேராசிரியர்கள் சுகுமார், பரமசிவம் கலந்து கொண்டனர்.உணவு பொருட்கள் கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், மெழுகு பூசப்பட்ட கப்புகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பிளாஸ்டிக் பை, கொடிகள் ஆகியவற்றை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை