உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெட்டி எடுப்பு விழா

பெட்டி எடுப்பு விழா

பரமக்குடி: பரமக்குடி மகா ஈஸ்வரகுப்த சாத்தனார் கோயிலில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு பெட்டி எடுப்பு விழா நடந்தது. ஏப்., 27 காலை கணபதி பூஜையுடன் விழா துவங்கி, சக்தி குமரன் செந்தில் கோயிலில் அன்னதானம் நடந்தது. ஏப்., 28 காலை 6:00 மணிக்கு கருப்பணசாமி பெட்டி புறப்பாடாகி, இரவு ஏழு மணிக்கு சக்தி குமரன் கோவிலில் இருந்து பூப்பல்லக்கில் வீதி வலம் வந்தனர். இரவு பொங்கல் வைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்கி சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !