போக்சோவில் சிறுவன் கைது
முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே 16 வயது பள்ளி மாணவியை கடத்திய 17 வயது சிறுவனை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.முதுகுளத்துார் புளியங்குடியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி பிப்.,18ல் மாயமானார். போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்த போது முதுகுளத்துார் ஆதனக்குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்திச் சென்றது தெரிய வந்தது. சிறுவனை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி போக்சோ சட்டத்தில் கைது செய்து மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினார்.