மேலும் செய்திகள்
சிறப்பு தொழில் கடன் விழா:கடலுாரில் 19ல் துவக்கம்
14-Aug-2024
ராமநாதபுரம்: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மதுரை கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் செப்.6 வரை நடக்கிறது.முகாமில் கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மூலதன மானியம், வட்டி மானியம், இதர மானியங்கள், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு 25 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். விபரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் அம்பேத்கர் சாலை, மதுரை---625 020 அலுவலகத்தை நேரில் அல்லது 87780 40572, 0452--253 3331 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
14-Aug-2024