உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டில் கால்நடைகளால் பயணிகள் சிரமம்

ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டில் கால்நடைகளால் பயணிகள் சிரமம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் உள்ளதால் இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் பஸ் வசதி உள்ளதால் காலை, மாலை நேரங்களில் மாணவர்களும், அலுவலகம் செல்வோரும் அதிகம் வந்து செல்லும் பகுதியாக பஸ் ஸ்டாண்ட் விளங்குகிறது.முக்கியத்துவம் வாய்ந்த பஸ்டாண்ட் வளாகத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கால்நடைகள் முகாமிடுகின்றன. இதனால் பஸ்ஸ்டாண்ட் வரும் பஸ் டிரைவர்கள் கால்நடைகளால் சிரமப்படுவதுடன் பயணிகளும் அச்சமடைகின்றனர். எனவே அதிகாரிகள் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், கால்நடை உரிமையாளர்களுக்கு அபதாரம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை