உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி தெருக்களில் உணவு தேடி அலையும் கால்நடைகள்

பரமக்குடி தெருக்களில் உணவு தேடி அலையும் கால்நடைகள்

பரமக்குடி : பரமக்குடியில் தெருக்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கிடைக்கும் உணவுகளை தின்பதற்காக தெருக்களில் கால் நடைகள் சுற்றித்திரிகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கால்நடைகளை வளர்ப்போர் அவற்றை தெருக்களில் அலைய விடுகின்றனர். பசுக்கள், காளை மாடுகள் நாய்களின் இனப்பெருக்கத்திற்கு இணையாக தெருக்களில் திரிகின்றன. இவை தெருக்களில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் கடந்து செல்ல முடியாதபடி நின்று கொள்கின்றன. இதன் உரிமையாளர்கள் எந்நேரமும் தங்களுடைய இடங்களில் அடைத்து வைக்காமல் திரிய விட்டுள்ளனர்.பசு மாடுகளை பால் கறக்க மட்டும் அழைத்துச் சென்று மீண்டும் உணவிற்காக அவிழ்த்து விடுகின்றனர். இவை மக்கள் சாப்பிட்டு வீசிய பிளாஸ்டிக் பேப்பரில் இருக்கும் உணவுப்பொருட்கள் பிளாஸ்டிக்கோடு சேர்த்து சாப்பிடும் நிலை உள்ளது. மேலும் கடைகள் மற்றும் வாகனங்களில் மக்கள் வைத்திருக்கும் உணவு பொருட்களையும் சாப்பிடுகின்றன. கால்நடைகள் பள்ளங்களில், சாக்கடைகளில் விழுந்து விபத்திற்குள்ளாவது தொடர்கிறது. இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பரமக்குடியில் இறந்து கிடந்த மாட்டை யாரும் உரிமை கோராத நிலை ஏற்பட்டது. ஆகவே கால்நடை உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை