மேலும் செய்திகள்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
11-Aug-2024
ரெகுநாதபுரம் : மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான மனுக்கள் வாங்கும் முகாம் நேற்று காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடந்தது.ரெகுநாதபுரம் மகளிர் மன்ற கட்டடத்தில் நடந்த முகாமிற்கு யூனியன் சேர்மன் புல்லாணி தலைமை வகித்தார். கீழக்கரை தாசில்தார் முகமது ஜலாலுதீன் முன்னிலை வகித்தார். ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.முத்துப்பேட்டை, மேதலோடை, பெரிய பட்டினம், ரெகுநாதபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் மனுக்கள் அளித்தனர். திருப்புல்லாணி பி.டி.ஓ., ராஜேஸ்வரி, கோட்டை இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், ரெகுநாதபுரம் ஊராட்சி துணைத் தலைவர் ஜெகத்ரட்சகன், ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான், நாகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* திருவாடானை அருகே பாண்டுகுடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் அமர்நாத் தலைமை வகித்தார். பி.டி.ஓ. (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள், ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ஜெயமுருகன், ஊராட்சி தலைவர்கள் பாண்டுகுடி சிங்கதுரை, தேளூர் அய்யப்பன், கோடனுார் காந்தி, சிறுகம்பையூர் குமார், தளிர்மருங்கூர் ராமநாதன், என்.மங்கலம் தமிழ்செல்வி, நகரிகாத்தான் பவுலின்மேரி, மாவூர் கலைசெல்வி, பதனக்குடி அமுதா ஆகிய ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடமிருந்து 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறபட்டன.
11-Aug-2024